Welcome to Jettamil

கழுத்து நெரித்து கொ*ல்லப்பட்ட யாழ் பல்கலை விரிவுரையாளர் – அறிக்கையில் வெளியாகிய தகவல்

Share

கழுத்து நெரித்து கொ*ல்லப்பட்ட யாழ் பல்கலை விரிவுரையாளர் – அறிக்கையில் வெளியாகிய தகவல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் தயாளினி திலீபன் அவர்களின் மரணம் தொடர்பான விசேட விசாரணை, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

இந்த மரண விசாரணையின் போது, உயிரிழந்தவிரிவுரையாளரின் மகனும் காவல்துறையினரும் தங்களின் முக்கிய சாட்சியங்களை நீதிமன்றத்தில் பதிவு செய்தனர்.

அப்போது நீதிமன்றத்தில் பேசிய போலீசார், “சட்ட மருத்துவ அதிகாரியின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, விரிவுரையாளரின் மரணத்திற்குப் பிரதான காரணம் அவர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டமையே” எனத் தெரிவித்துச் சபையில் அதிரடித் திருப்பத்தை ஏற்படுத்தினர்.

இக்கொ*லைச் சம்பவத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தயாளினி திலீபனின் சொந்த மகள் மற்றும் மருமகன் ஆகிய இருவர் மீதுமே தங்களுக்குப் பலத்த சந்தேகம் இருப்பதாகப் போலீசார் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிவான், சந்தேகநபர்களான மகள் மற்றும் மருமகனின் விளக்கமறியல் காலத்தை வரும் ஜூன் மாதம் 3-ஆம் தேதி வரை நீடித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை