உக்ரைனின் தலைநகரான கீவ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், தமது ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க நிதியுதவியில் இயங்கும், ஃப்ரீ ஐரோப்பா வானொலி தெரிவித்துள்ளது.
வீரா ஹைரிச் என்ற ஊடகவியலாளர் வசித்து வந்த கட்டடம் தாக்கப்பட்டதில் அவர் உயிரிழந்தார் என்றும், அவரது உடல் கட்டட இடிபாடுகளில் இருந்து நேற்று கண்டெடுக்கப்பட்டதாகவும் ஃப்ரீ ஐரோப்பா வானொலி தெரிவித்துள்ளது.
அதேவேளை, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டெரெஸின் வருகையின் போது கீவ் நகரத்தின் மீது ரஷ்யா நடத்திய இந்த தாக்குதலின் முலம், ஐக்கிய நாடுகள் சபையை அவமானப்படுத்த ரஷ்யா முயற்சிப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
கீவ் நகரின் மீது நடைபெற்ற இந்த தாக்குதலால் அங்கு ஏற்பட்டு வந்த தற்காலிக இயல்பு நிலை சிதைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டெரெஸின் பயணத்தின்போது உக்ரைனின் கீவ் மீதான ரஷ்யாவின் தாக்குதல், ‘மனிதாபிமானமற்றது’ என்று ஜெர்மனி கண்டனம் தெரிவித்துள்ளது.