அம்பாறை – அக்கரைப்பற்று, பனங்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு பனங்காடு பாலத்துக்கு அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பேர் பலியாகினர் என்று தெரியவந்துள்ளது.
பனங்காடு பிரதேசத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேகத்தை கட்டுப்படுத்த முடியாத உந்துருளி வீதியின் அருகே இருந்த தூண் ஒன்றில் மோதியே விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.