Welcome to Jettamil

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி சங் – சரத் வீரசேகர கொந்தளிப்பு

Share

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி சங் – சரத் வீரசேகர கொந்தளிப்பு

பிரிவினைவாதிகளுடன் ஒன்றிணைந்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டுள்ளார். அவரை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவிப்போம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் பிரிவினைவாதத்துக்கு எதிரான கூட்டணியினர் ஈடுப்பட்டனர்.

இப் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலே சரத் வீரசேகர இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கையின் இறையாண்மைக்கும், சுயாட்சிக்கும் சவால் விடுக்கும் வகையில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் செயற்பட்டுள்ளார்.

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது வியன்னா ஒப்பந்தத்தையும் மீறியுள்ளார்.

அமெரிக்க தூதுவர், எமது அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தின் போது முறையற்ற வகையில் செயற்பட்டார். அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்.

எனவே இவரை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறோம்.

அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிறுவனம், பாலினம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக பல மில்லியன் டொலர்களை செலவழித்துள்ளாக அமெரிக்காவின் புதிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் இலங்கையின் கலாச்சாரத்தை சீரழிப்பதற்காகவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனவே இந்த விடயம் குறித்து முறையான விசாரணைகளை நடாத்தி, நிதி பெற்றுக் கொண்டவர்களின் விபரங்களை பகிரங்கப்படுத்துமாறும் கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பட்டதாரிகள் போராட்டம்: வேலைவாய்ப்பு கோரிக்கை

யாழ்ப்பாண மாவட்டத்தில் பட்டதாரிகள் வேலைவாய்ப்பு கோரி நடத்திய அமைதியான போராட்டம் – அரசாங்கத்தின் பதில் என்ன?

சமூகம் புதுப்பிப்பு: இன்று

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை