Welcome to Jettamil

கெஹெல்பத்தர பத்மேவின் வாக்குறுதி: கணேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பின்னணியில் அம்பலமாகும் உண்மைகள்!

Share

கெஹெல்பத்தர பத்மேவின் வாக்குறுதி: கணேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பின்னணியில் அம்பலமாகும் உண்மைகள்!

பாதாள உலகத் தலைவன் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில், முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு கெஹெல்பத்தர பத்மே வழங்கிய ஒரு முக்கிய வாக்குறுதியே காரணமாக இருந்துள்ளது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய நாடொன்றிற்கு அனுப்புவதாக பத்மே வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையிலேயே இஷாரா இந்தக் கொலைத் திட்டத்தின் பின்னணியில் செயற்பட்டுள்ளார்.

சஞ்சீவ கொலையை நிறைவேற்றுவதற்காக இஷாரா எந்தப் பணத்தையும் பெறவில்லை எனவும், ஐரோப்பிய நாடொன்றுக்குச் செல்வதே இஷாராவின் ஒரே கனவாக இருந்தது எனவும் விசாரணைகள் தெரிவிக்கின்றன.

இஷாராவுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற, ஜே கே. பாய் என்ற நபருக்கு பத்மே 65 இலட்சம் ரூபாயை வழங்கி, போலி கடவுச்சீட்டுகளைத் தயாரித்து இஷாராவை ஐரோப்பாவிற்கு அனுப்பத் திட்டமிட்டிருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.

சிறு வயது முதல் போதைப்பொருள் தொடர்பு:

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், “சஞ்சீவ கொலையில் பத்மேவிடம் இருந்து எந்தப் பணத்தையும் பெறவில்லை, நேபாளத்தில் தங்கியிருக்க மட்டுமே அவர் மாதாந்தம் தனக்குப் பணம் அனுப்பினார்” என்று இஷாரா தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தனது சிறு வயதிலிருந்தே கெஹெல்பத்தர பத்மேவின் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருந்ததாகவும் இஷாரா வெளிப்படுத்தியுள்ளார். தனது கனவை நனவாக்குவதாக உறுதியளித்த பின்னரே, சஞ்சீவ கொலைத் திட்டத்திற்குப் பத்மே, இஷாராவின் ஆதரவைப் பெற்றுள்ளார்.

இஷாரா செவ்வந்தி உட்பட நேபாளத்தில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை