கிளிநொச்சி சிறுவனின் சாதனை நடைபயணம் நேற்று மருதங்கேணியை வந்தடைந்தது!
சாதனையொன்றை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கில், கிளிநொச்சி, கோணாவில் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய முரளிதரன் டியோஜன் எனும் சிறுவன் நாடளாவிய ரீதியாக நடைப்பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் மன்னார் சங்குப்பிட்டி ஊடாக யாழ்ப்பாணம் வருகைதந்து அங்கிருந்து பருத்தித்துறை நகரை சென்றடைந்த நிலையில் நேற்று பிற்பகல் மருதங்கேணி பகுதியை வந்தடைந்துள்ளனர்.
சிறுவயதில் ஏதாவது ஒரு சாதனையை நிலைநாட்ட வேண்டும் எனும் நோக்கில் இந்த பயணத்தை இவர் ஆரம்பித்திருந்தார். சிறுவனுடன் அவரது தந்தையாரும் இணைந்திருந்தார்.
இந்நிலையில் நாளையதினம் கிளிநொச்சி நகரில் 11 மணியளவில் பயணம் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.