Welcome to Jettamil

இரவோடு இரவாக நாட்டை விட்டு தப்பிச் சென்றார் கோட்டா

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று அதிகாலை நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

விமானப்படை விமானம் ஒன்றில் அவர், இன்று அதிகாலை 2.50 மணியளவில் மாலைதீவு விமான நிலையத்தில் தரையிறங்கினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோட்டாபய ராஜபக்ச, அவரது மனைவி அயோமா ராஜபக்ச, மற்றும் மகிந்த ரணசிங்க உள்ளிட்ட இரண்டு மெய்ப்பாதுகாவலர்களுடன், விமானப்படை விமானம் மாலைதீவில் தரையிறங்கியுள்ளது.

ராஜபக்சவினருக்கு மிகவும் நெருக்கமான – மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய சபாநாயகருமான, மொகமட் நசீட்,  மாலே விமான நிலையத்தில் காத்திருந்து அவர்களை வரவேற்று பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

முன்னதாக, கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற போராட்டங்களை அடுத்து. இன்று பதவி விலகுவதாக கோட்டாபய ராஜபக்ச சபாநாயகருக்கு அறிவித்திருந்தார்.

எனினும், இறுதி நேரத்தில் அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லும் முயற்சிகள் தோல்வியடைந்து வந்தால்,  பதவி விலகுவதற்கு நிபந்தனைகள் விதித்த்தாகவும் நேற்றிரவு செய்திகள் வெளியாகின.

தாம் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதற்கு இடமளிக்காதவரை பதவி விலகப் போவதில்லை என்று கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருப்பதாக தகவல்கள் கசிந்திருந்தன.

இந்த நிலையிலேயே விமானப்படையின் போக்குவரத்து விமானத்தில் இன்று அதிகாலை புறப்பட்ட அவர், மாலைதீவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.

2019ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில், 69 இலட்சம் சிங்களபௌத்த மக்களின் வாக்குகளினால், தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ச கடந்த இரண்டரை ஆண்டுகளில் நாட்டை மோசமான பேரழிவுக்குள் தள்ளியிருந்தார்.

இதனால் மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பலைகளை தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டுத் தப்பியோடும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை