Welcome to Jettamil

மிக்சருக்காக கொலை செய்யப்பட்ட நபர் – கடை உரிமையாளர் பரிதாபமாக பலி

Share

மிக்சருக்காக கொலை செய்யப்பட்ட நபர் – கடை உரிமையாளர் பரிதாபமாக பலி

சுன்னாகம்: யாழ்ப்பாணம், சுன்னாகம் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் கத்திக் குத்து தாக்குதல் சம்பவம் ஒன்றில் 35 வயதுடைய கடை உரிமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஏழாலை கிழக்கைச் சேர்ந்த சிங்காராவேல் தானவன் (35) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இவரது கடைக்கு குடிபோதையில் வந்த இரண்டு இளைஞர்கள், ‘மிக்சர்’ என்ற உணவுப் பொருளைக் கேட்டுள்ளனர். அதற்கு கடை உரிமையாளர் பணம் கேட்டபோது, அவர்களுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கொலைச் சம்பவம்:

இந்த வாக்குவாதத்தின் முடிவில், ஆத்திரமடைந்த இளைஞர்கள் கடை உரிமையாளர் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த தானவன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது தொல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில், தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இளைஞர்களையும் சுன்னாகம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை