Welcome to Jettamil

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் – பாதுகாப்பு கடைமையில் பொலிஸார்  

Share

களனி பல்கலைக்கழக மாணவர்கள் அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.

மாணவ சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களான கெழும் மற்றும் டில்ஷான் ஆகியோரை உடனடியாக விடுவிக்குமாறு கோரி குறித்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

களனி பல்கலைக்கழக பகுதியிலிருந்து இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாணவர்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உருவப் பொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

 குறித்த பகுதியில் பெரும் திரளான காவல்துறையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை