பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று கொழும்பை முற்றுகையிடும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை படுகுழிக்குள் தள்ளியுள்ள அரசாங்கத்துக்கு எதிராக, கொழும்பை முற்றுகையிடும் போராட்டத்தை இன்று ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கவுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் 2 மணிக்கு, இந்த முற்றுகைப் போராட்டம் வீதிகளின் ஊடாக நகர்ந்து, அடையாளம் வெளிப்படுத்தப்படாத இரண்டு இடங்களில் ஒன்று கூடி முன்னெடுக்கப்படவுள்ளது.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும், இது ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் அல்ல, பாதிக்கப்பட்ட அனைத்து மக்களினதும் போராட்டம் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் போராட்டத்தில் நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மக்கள் பங்கேற்பார்கள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.