Welcome to Jettamil

யாழ்ப்பாண மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை

Share

யாழ்ப்பாண மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் சாவகச்சேரி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவையானது (04.11.2025) சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் காலை 8.30 மணிக்கு கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன், நகர சபையின் தவிசாளர் வ. ஸ்ரீபிரகாஸ், சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் பொ. குகதாசன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரது பங்குபற்றுதலுடன் ஆரம்பமாகியது.

இந் நடமாடும் சேவையில்

ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் (தேசிய அடையாள அட்டை), ஓய்வூதியம் தொடர்பான சேவைகள், பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள், மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகள், பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகள், பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள், திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள் (NVQ), சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள்,காணி தொடர்பான சேவைகள், மருத்துவ முகாம் போன்ற சேவைகள் வழங்கப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு கண்புரை பரிசோதனை (Cataract) இடம்பெற்ற இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்குதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மேலும், இந் நிகழ்வில் சக்கரநாற்காலி, செவிப்புலனற்றவர்களுக்கான கருவிகள், மூக்கு கண்ணாடி என்பன தெரிவு செய்யப்பட்ட தகுதியான பொதுமக்களுக்குஇலவசமாக வழங்கப்பட்டதுடன், உறுமய திட்டத்தின் கீ‌ழ் இலவச காணிப்பத்திரமும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன், சாவகச்சேரி பிரதேச செயலாளர் திரு F. C. சத்தியசோதி மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வந்த பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை