தமிழீழ மக்களின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் தாயகம் முழுவதும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
துயிலுமில்லத்தில் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டுள்ள மக்கள் கண்ணீர் மல்க மலர் தூவி சுடரேற்றி உணர்வு பூர்வமாக உயிரிழந்த மாவீரர்களுக்கும் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இம்முறை மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வில் வழமைக்கு மாறாக அதிக அளவிலான மக்கள் பங்கேற்று தமது அஞ்சலி செலுத்தினர்.







