Welcome to Jettamil

தென்னிலங்கையில் அடுத்தடுத்து மீட்கப்படும் மர்மத் தலைகள்! – அளுத்கம கடற்கரையில் ஆணின் தலை மீட்பு

Share

தென்னிலங்கையில் அடுத்தடுத்து மீட்கப்படும் மர்மத் தலைகள்! – அளுத்கம கடற்கரையில் ஆணின் தலை மீட்பு

அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முரகல்ல கடற்கரைப் பகுதியில், இன்று காலை வெட்டப்பட்ட மனிதத் தலைப் பகுதி ஒன்று மர்மமான முறையில் ஒதுங்கியுள்ளது.

அப்பகுதியிலுள்ள பிரதான சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் பின்புறமாகக் கண்டெடுக்கப்பட்ட இந்தத் தலைப் பகுதி, ஓர் ஆணுக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இன்று காலை பொலிஸாருக்குக் கிடைத்த அவசரத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அளுத்கம பொலிஸார், தலைப் பகுதியை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

உயிரிழந்த நபர் யார், அவர் எங்கு வைத்துக் கொலை செய்யப்பட்டார் என்பது போன்ற எந்தவொரு விபரமும் இதுவரை வெளியாகவில்லை.

தென்னிலங்கையில் இவ்வாறான கொடூரம் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த வாரம் காலி பகுதியில் வெட்டப்பட்ட மனிதத் தலை ஒன்று, வீதியோரத்தில் இருந்த சிலையொன்றின் மீது கொடூரமான முறையில் தொங்கவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

அந்த அதிர்ச்சி மறைவதற்குள், தற்போது அளுத்கமவிலும் மற்றுமொரு தலை மீட்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை