டிக்கோயா இரட்டைக் கொ*லை வழக்கு! – பெற்றசோ பகுதியில் பதுங்கியிருந்த பிரதான சந்தேக நபர் அதிரடியாகக் கைது!
டிக்கோயா நகர்ப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அண்மையில் அரங்கேறிய இரட்டைக் கொ*லைச் சம்பவம் மலையக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இக் கொ*டூரச் சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் பொலிஸார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன்படி, பொகவந்தலாவை – பெற்றசோ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரகசியமாகப் பதுங்கியிருந்த முக்கிய சந்தேக நபரை விசேட பொலிஸ் குழுவினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.





