நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 770 குற்றவாளிகள் கைது
770 குற்றவாளிகள் நீதிமன்றத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 770 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 567 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 203 சந்தேக நபர்கள் என மொத்தம் 770 சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 567 சந்தேக நபர்களில் 06 சந்தேக நபர்களிடம் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் போதைக்கு அடிமையான 02 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 05 சந்தேகநபர்களும் அடங்குவர்.
மேலும், கைது செய்யப்பட்ட 203 சந்தேக நபர்களில், குற்றப் பிரிவினருக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில், 21 சந்தேக நபர்கள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும், 160 போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் பெற்றுள்ளனர்.
தலைமறைவான 11 சந்தேக நபர்களும், குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த 11 சந்தேக நபர்களும் கைரேகை மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.