Welcome to Jettamil

மரணத்தையும் இரத்தத்தையும் காலை உணவாகக் கொள்கிறார் நெதன்யாகு! – பிரேசில் ஆவேசம்

Share

மரணத்தையும் இரத்தத்தையும் காலை உணவாகக் கொள்கிறார் நெதன்யாகு! – பிரேசில் ஆவேசம்

மத்திய கிழக்கில் அப்பாவி மக்களின் உயிர்கள் பலியாவதைக் கண்டித்துள்ள பிரேசில் அதிபர் லூலா டா சில்வா, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

“நெதன்யாகு ஒவ்வொரு நாளையும் மரணத்தையும் இரத்தத்தையும் காலை உணவாகக் கொண்டே தொடங்குகிறார்” என அவர் முன்வைத்துள்ள விமர்சனம் சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சட்டம் என்பது வெறும் பலவீனமானவர்களுக்கு மட்டும்தானா? என அவர் இதன்போது பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

வர்த்தகம் நடைபெறும் ஹோர்முஸ் நீரிணை விவகாரத்திற்கு உலக நாடுகள் கொடுக்கும் முக்கியத்துவத்தை லெபனானில் மடியும் அப்பாவி உயிர்களுக்குக் கொடுப்பதில்லை என அவர் ஆவேசம் அடைந்துள்ளார்.

“லெபனானில் மடியும் உயிர்களை விட ஹோர்முஸ் நீரிணைதான் உலக நாடுகளுக்கு முக்கியம் என்றால், ஈரான் அந்த நீரிணையை மூடுவதை நான் ஆதரிக்கிறேன்” என அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

“அந்தச் சனியன் பிடித்த நீரிணையை விட ஒரு மனித உயிர் ஆயிரம் மடங்கு மதிப்பு வாய்ந்தது” என அவர் குறிப்பிட்டமை உலகத் தலைவர்களிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை