Friday, Jan 17, 2025

ஏ.எல் பரீட்சையில் திருப்தி இல்லை; யாழில் மாணவி விபரீத முடிவு..!

By jettamil

ஏ.எல் பரீட்சையில் திருப்தி இல்லை; யாழில் மாணவி விபரீத முடிவு..!

A/L பரீட்சையில் திருப்தி இல்லாத நிலையில் யாழில் மாணவி விபரீத முடிவை எடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெல்லிப்பழையிலுள்ள பிரபல பாடசாலையில் கல்வி பயின்ற மாணவியொருவர், இம்முறை நடைபெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சையில் தோற்றியிருந்தார்.

நேற்று முன்தினம் (30) பரீட்சை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது, அந்த மாணவி தாய், தந்தையரிடம் பரீட்சையின் முடிவில் திருப்தியற்றதாக கூறி கவலையடைந்தார். பிறகு, தந்தை வெளியே சென்றபோது, அவர் வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இந்த மாணவி க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 7ஏ 2பி மதிப்பெண்களை பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, அவரது சடலத்தை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயவாலசிங்கம் விசாரித்து, உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தார்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு