Welcome to Jettamil

சாரதி உறக்கத்தால் மரத்தில் மோதிய வேன்: ஒருவர் பலி, 6 பேர் காயம்

Share

சாரதி உறக்கத்தால் மரத்தில் மோதிய வேன்: ஒருவர் பலி, 6 பேர் காயம்

மொனராகலை – தணமல்வில – வெல்லவாய வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 288ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்றுள்ளது.

தணமல்விலையிலிருந்து வெல்லவாய நோக்கிப் பயணித்த வேன் ஒன்று, வீதியை விட்டு விலகி அருகிலிருந்த ஒரு மரத்தின் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தணமல்வில பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு தணமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் 56 வயதான தம்புள்ளை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வேனின் சாரதி உறங்கியதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த விபத்துத் தொடர்பில் தணமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை