வடமராட்சி – வல்லை பகுதியில், உள்ள விருந்தினர் விடுதியின் மதுசாலையில் நேற்றிரவு இரண்டு தரப்புக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திக்கம், நாச்சிமார் கோவிலடி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஞானசேகரம் குணசோதி என்பனவே உயிரிழந்தவர் என தெரியவந்துள்ளது.
மதுபானசாலையில், வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறியதாகவும், உடைந்த போத்தல் உட்பட்ட கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் சிலர் மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் நடைபெற்ற விருந்தினர் விடுதிக்கு சென்ற நெல்லியடிப் பொலிசார் விடுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.