Welcome to Jettamil

பிரதமர் மகிந்த நாளை பதவி விலகுவார்

Share

தேசிய ஒத்துழைப்பு அரசாங்கம் என்ற பெயரில், மீண்டும் பொதுஜன பெரமுனவும் பங்காளிக் கட்சிகளும் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க இணங்கம் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர், தற்போதைய நெருக்கடி நிலைமையைத் தீர்ப்பதற்காக இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்து கலந்துரையாடுவதற்கு,  40 பேர் கொண்ட சுயாதீன அணியைச் சேர்ந்த ஐந்து பேர், நியமிக்கப்பட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, அனுர பிரியதர்ஷன யாப்பா, நிமல் சிறிபால டி சில்வா, ரிரான் அலஸ் மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரைக் கொண்ட இந்தக் குழு நேற்று பசில் ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சு நடத்தியது.

அமைச்சர்கள் ஜிஎல்.பீரிஸ், ரமேஸ் பத்திரன, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாகர காரியவசம், சஞ்ஜீவ எதிரிமான்ன ஆகியோர் பொதுஜன பெரமுன சார்பில் பசில் ராஜபக்சவுடன் இணைந்து பேச்சுக்களில் பங்கேற்றனர்.

இந்தப் பேச்சுக்களின் போதே,தேசிய ஒத்துழைப்பு அரசாங்கம் என்ற பெயரில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுக்களில், இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு கருத்தியல் ரீதியாக இணக்கம் காணப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்,  தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகிக் கொள்வார் என்றும், புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நாளை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட பின்னர், மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பிரதமராக பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த எவரும் பதவியேற்கமாட்டார்கள் என்றும் மற்றொரு தகவல் கூறுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை