விடாமுயற்சியின் முதல் பாடல் நாளை வெளியாகும்
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி இணைந்து உருவாக்கியுள்ள படம் விடாமுயற்சி
இந்த படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை அனிருத், ஒளிப்பதிவு ஓம் பிரகாஷ் மற்றும் படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொள்கிறார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக், போஸ்டர் மற்றும் கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டதை அடுத்து, ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த மாதம் வெளியான டீசர் இணையத்தில் வைரலானது, மற்றும் படத்தின் வெளியீடு பொங்கல் அன்று என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் நாளை (1 மணிக்கு) வெளியிடப்படுவதாக படக்குழு புதிய போஸ்டரின் மூலம் அறிவித்துள்ளது.