Welcome to Jettamil

கஸகஸ்தானில் கண்டதும் சுட உத்தரவு…

Share

கஸகஸ்தானில் ஆர்ப்பாட்டம் நடத்துவோரைக் கண்டதும் சுட்டுக் கொல்வதற்கான உத்தரவை  அந்த நாட்டின் ஜனாதிபதி பிறப்பித்துள்ளதற்கு,  அமெரிக்க இராஜாங்கச் செயலர் அன்டனி பிளிங்கன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அத்தகைய உத்தரவு மிகவும் தவறானது என்று அவர் கூறியுள்ளார்.

கஸகஸ்தானில் அறிவிக்கப்பட்டுள்ள அவசரநிலை குறித்து அமெரிக்கா ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளதாகவும் அன்டனி பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தாம், கஸகஸ்தான் வெளியுறவு அமைச்சர் முக்தார் திலியுபெர்டியுடன் பேசியதாகவும், அமெரிக்க இராஜாங்கச் செயலர் தெரிவித்துள்ளார்.

கஸகஸ்தான் அரசாங்கம், வன்முறையைக் களையும் அதே வேளையில், ஆர்ப்பாட்டக்காரர்களின் உரிமைகளையும் மதித்து நடக்கும் என அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை