Welcome to Jettamil

சந்தையில் நியாயமான விலையில் விநியோகிக்க போதுமான அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்

Share

உடனடியாக அமலுக்குவரும் வகையில் 100,000 மெற்றிக் டன் அரிசியை இடையகப் பங்காகக் கொள்வனவு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) வர்த்தக அமைச்சு மியன்மாருடன் கைச்சாத்திட்டதைத் தொடர்ந்து மேற்படி யோசனைக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

நுகர்வோருக்கு போதுமான அரிசி இருப்புக்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கும் அரிசி இருப்புக்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும் 100,000 மெற்றிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை அரசுக்கும் மியன்மார் அரசுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த அரிசி இருப்புக்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.

இதன்படி, இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் ஊடாக ஒரு மெற்றிக் டன் அரிசி 460 அமெரிக்க டொலர்களுக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளது.

அரிசி இறக்குமதிக்கான மொத்த செலவு 46 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை