Welcome to Jettamil

சீனாவுக்கு பாதுகாப்பு இரகசியங்களை விற்ற ராஜீவ் சர்மாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டன

Share

இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை சீன உளவு அமைப்புக்கு விற்றதாக குற்றம்சட்டப்பட்டுள்ள, பத்திரிகையாளர் ராஜீவ் சர்மாவின் 48.21 இலட்சம் ரூபா மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

சீன உளவு அமைப்புக்கு இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை விற்றதாக, டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா டெல்லி காவல் துறையினால், கடந்த 2020-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

அந்த வழக்கில் அவர் பிணையில் வெளியே வந்ததையடுத்து, 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

கடந்த வாரம் டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கிய நிலையில் டெல்லி பீதம்புராவில் உள்ள அவரது, 48.21 இலட்சம் ரூபா மதிப்புள்ள குடியிருப்பு சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

ராஜீவ் சர்மா சீன உளவு அமைப்புக்கு இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான ஆவணங்களை பணத்துக்காக விற்றுள்ளார்.

அவரும் அவருடைய கூட்டாளிகளும் சீனா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களில் நடத்தப்பட்ட போலி நிறுவனங்கள் மூலம் பணம் பெற்றுள்ளனர் என்று அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை