பாராளுமன்றம் எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி கூடுகிறது! – சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன அறிவிப்பு!
ஶ்ரீலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறும் என சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.
பிரதமரின் கோரிக்கைக்கு அமையவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16இற்கு அமைவாகச் சபாநாயகரால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் (இலக்கம் 2466/33) நேற்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12, 2025) வெளியிடப்பட்டுள்ளது.





