Welcome to Jettamil

சிறையில் இருந்த பேரறிவாளன் பிணையில் விடுதலை

Share

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன் நேற்று  புழல் சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனுக்கு பிணை வழங்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

எனினும், விடுதலை கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, பேரறிவாளன் ஏற்கனவே சிறைவிடுப்பில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால் பிணை வழங்கும்படி கோரப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது.

இந்தநிலையில்,  புழல் சிறையில் இருந்து வெளியே வந்த பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் வரவேற்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள், பிணை ஒரு இடைக்கால நிவாரணம். நீதிக்கான எங்கள் போராட்டத்திற்கு துணை நிற்கும் முதல்வருக்கு நன்றி என தெரிவித்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை