Welcome to Jettamil

கீவ்வை நெருங்கிய ரஷ்யப் படைகள்

Share

உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்யப் படைகள் நெருங்கியுள்ள  நிலையில், அங்கு பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கீவ் நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறி வருகின்றதுடன், மக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள், பாடசாலைகள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில்,  கீவ் முழுவதும் நேற்று இரவு முதல் அடுத்த 36 மணி நேரத்திற்கு முழு பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படுவதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய படைகள் நெருங்கி வரும் சூழ்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படியும், பதுங்கு குழிகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, போலந்து, செக் குடியரசு மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் பிரதமர்கள் நேற்று உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமிர் செலன்ஸ்கியை சந்திப்பதற்காக கீவுக்குச் சென்றுள்ளனர்.

உக்ரைனின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு ஆதரவை உறுதிபடுத்துவதே இந்தப் பயணத்தின் நோக்கம் என்று போலந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது,

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடுத்த பின்னர், அங்கு சென்றுள்ள முதல் வெளிநாட்டுத் தலைவர்கள் இவர்களாவர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை