ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று இரவு நாட்டு மக்களுக்கு முக்கிய உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
ஜனாதிபதியின் உரை இன்றிரவு 8.30 மணிக்கு தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் நிகழ்த்தப்பட்டவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்து, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தைப் பதவி விலக கோரி எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் ஜனாதிபதியின் உரை இடம்பெறுகிறது.
ஜனாதிபதி தனது உரையில், நாட்டின் தற்போதைய நிலையை தெளிவுபடுத்துவார் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது.