இன்று மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை மின்வெட்டு
இன்று (13) மாலை 5:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடை காரணமாக, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்தன.
இதன் காரணமாக, நேற்று தவிர, முந்தைய இரண்டு நாட்களிலும் நாடு முழுவதும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு மேற்கொள்ளப்பட்டது.
நுரைச்சோலை அனல் மின் நிலையம் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்புவதாக, அமைச்சு தெரிவித்துள்ளது.