இலங்கையில் மூச்சு விடுவதற்கு சிறுவர்கள் சிரமப்படுவதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக சிறுவர்கள் மத்தியில் வைரஸ் தொற்று சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல், நிமோனியா போன்ற நோய்களின் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றது.
இதன்காரணமாக மூச்சு விடுவதற்கு அவர்கள் சிரமபடுவதாக அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறான பாதிப்பு ஏற்படும் சிறுவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வைத்தியர் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.