Welcome to Jettamil

நாடளாவிய ரீதியில் இன்று சிறப்பாக இடம்பெறும் ரம்ஜான் பண்டிகை

Share

இஸ்லாமிய மக்கள் புனித நோன்பு பெருநாளை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடுகின்றனர். இலங்கையில் புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு நேற்று முன்தினம் அறிவித்தது.

இதனையடுத்து, இஸ்லாமியர்கள் இன்றைய தினம் புனித நோன்பு பெருநாளை நாட்டின் பல பிரதேசங்களில் கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி, யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் நோன்புப் பெருநாள் தொழுகை யாழ். மர்யம் ஜும்ஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இன்று காலை 6.45 மணியளவில் நபிவழியில் நம் தொழுகை எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி ஜின்னா மைதானத்தில் இடம்பெற்றது.

நோன்புப் பெருநாள் தொழுகை மற்றும் பெருநாள் குத்பா பிரசங்கம் என்பன மௌலவி எம்.ஏ.பைசர்னால் நிகழ்த்தப்பட்டது. இன்றைய பெருநாள் திடல் தொழுகையில் யாழ். வாழ் முஸ்லிம்கள், தாய்மார்கள், இளைஞர்கள், யுவதிகள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதே போல் மலையகம், மன்னார், வவுனியா போன்ற பல இடங்களில் நோன்புப் பெருநாள் தொழுகை மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை