Sunday, Jan 19, 2025

யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் சாட்சியினை வாளால் தாக்க முயன்ற சந்தேகநபர் கைது

By jettamil

யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் சாட்சியினை வாளால் தாக்க முயன்ற சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் சாட்சியாக வந்த நபரை வாளால் தாக்க முயற்சித்த பிரதான சந்தேகநபர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் 2024ம் ஆண்டு மே 30ஆம் தேதி நடந்ததுடன், அப்போது மூவரின் குழுவில் இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இவர்கள் சாட்சியினை தாக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள்.

இந்த நிலையில், குறித்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் – ஆரியகுளம் பகுதியில் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் பொலிஸார் செய்த முறைப்பாட்டு பரிசோதனையின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் மீது வாள்வெட்டு தொடர்பான மூன்று திறந்த பிடியாணைகள் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குற்றவியல் விசாரணைகள் தற்போது தொடர்ந்துள்ளன.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு