கோவை சிறுமி குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிவாரணம்; தொலைபேசியில் ஆறுதல் சொன்ன CM விஜய்!
கோயம்புத்தூர் சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்துத் முதலமைச்சர் விஜய், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரைத் தொலைபேசி வாயிலாக நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசி, ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் பகிர்ந்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குப் போக்சோ (POCSO) சட்ட விதிகளின் கீழ் முதற்கட்டமாக 7 இலட்ச ரூபாய் அரசாங்க நிவாரண நிதியுதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது.




