உக்ரைனில் தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யா தங்களிடம் ராணுவ உதவி கோரியதாக வெளியான தகவலில் உண்மையில்லை என சீனா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யா சீனாவிடம் ராணுவ உதவிகளை நாடியுள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்தது.
தாக்குதலை தீவிரப்படுத்த சீனாவிடமிருந்து ரஷ்யா ராணுவ ஆயுதங்களை கேட்டதாக, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
மேலும், பொருளாதார தடைகளை சமாளிக்க சீனாவிடம் ரஷ்யா பொருளாதார உதவிகளை கேட்டதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
இந்தநிலையில், அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை சீனா முழுமையாக மறுத்துள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர்,
“ரஷ்யா எங்களிடம் ராணுவ உதவி கோரியதாக வெளியான தகவலில் உண்மையில்லை.
தீங்கு இழைக்கும் நோக்கத்துடன் உக்ரைன் விவகாரத்தில் சீனாவை குறிவைத்து அமெரிக்கா தவறான தகவல்களை பரப்புகிறது’ என்றும் கூறியுள்ளார்.