கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறையில் மீட்பு
கண்டி மாவட்டம் தவுலகல பகுதியில் வேனில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி, அம்பாறையில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
2025ம் ஆண்டு ஜனவரி 11ஆம் திகதி, கண்டி – தவுலகல பகுதியில் ஒரு மர்ம கும்பல், காம்பொல – மரியாவத்த பகுதியைச் சேர்ந்த 18 வயதான பாத்திமா ஹமீரா என்ற பாடசாலை மாணவியை கடத்தி சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விரிவான விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
இந்த விசாரணையின் போது, கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட வாகனம் 11ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், 12ஆம் திகதி, கம்பளை பகுதியில் வைத்து அந்த வாகனத்தின் சாரதி, தவுலகல காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இன்று (13.01.2025) காலை, அம்பாறையில் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபரை கைது செய்யப்பட்டது. அவர், தாயின் தம்பியான தனது மாமாவின் மகளையே கடத்தி கொண்டு வந்ததாக தெரிவித்தார்.
சந்தேகநபரின் புகாரின்படி, அவர் ஜப்பானில் பணியாற்றியவர், ஆனால் மாமாவிடம் பணம் பெற்றுவிடவில்லை. இதனால், அவர் 50 லட்சம் ரூபாய் கப்பம் கோருவதற்காக இந்த கடத்தல் சம்பவத்தை செய்ததாக கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது காவல்துறையினரால் நடைபெறுகிறது. கடத்தப்பட்ட பாடசாலை மாணவி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.