பருத்தித்துறை நகரில் பொலிஸார் விசேட தேடுதல்
பருத்தித்துறை பொலிசார் போதைப் பொருள் ஒழிப்பு சோதனை நடவடிக்கைகளை நேற்று பிற்பகல் 7:30மணியிலிருந்து பருத்திதுறை நகரில் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
பருத்தித்திறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையில் பருத்தித்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் D.cd. இலங்ககோன் வழிகாட்டலில் குறித்த சோதனை நடவடிக்கை இடம் பெற்றது.
மோப்ப நாயின் உதவியுடன் நெடுந்தூர பேருந்துகள், உள்ளூர் சேவையில் ஈடுபடும் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதில் மேலதிகமாக இராணுவம், சிறப்பு அதிரடி படையினர் ஆகியோரும் இணைந்துள்ளனர்.
இச் சோதனை நடவடிக்கையில் எந்தவிதமான போதை பொருட்களும் இதுவரை கைப்பற்றப்படவில்லை.