Welcome to Jettamil

சனத் நிஷாந்தவின் திடீர் மரணம் – வெற்றிடத்திற்கு புதியவர் நியமனம்

Share

சனத் நிஷாந்தவின் திடீர் மரணம் – வெற்றிடத்திற்கு புதியவர் நியமனம்

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் திடீர் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அதற்கமைய, ஜாதிக நிதஹஸ் பெரமுனவை சேர்ந்த ஜகத் பிரியங்கர அந்த பதவியில் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியங்கர, விமல் வீரவங்ச தலைமையிலான ஜாதிக நிதஹஸ் பெரமுனவின் மாவட்டத் தலைவராக செயற்படுகின்றார்.

அவர் தனது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியில் அமர்ந்திருப்பதால், அரசாங்கம் ஒரு ஆசனத்தை இழக்க நேரிடும் என அரசியல் ஆய்வளர்கள் குறிப்பிடுகின்றனர்.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று(25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை