தமிழ்நாடு சட்டப்பேரவையின் கேள்வி நேரம் விவாதம், முதல் முறையாக நேற்று நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்றையஅமர்வின் போது, முன்னாள் ஆளுநர் ரோசய்யா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், குன்னூர் உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்த 14 பேர் மற்றும், தென்னாபிரிக்க மனித உரிமை செயற்பாட்டாளர் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சட்டப்பேரவை கேள்வி நேரம் தொடங்கியது. சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக, கேள்விநேர பேரவை நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன.