ஜனவரி முதல் தொலைபேசி கட்டணங்களும் அதிகரிப்பு
வெட் வரியை திருத்தியமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், ஜனவரி முதலாம் திகதி முதல் தொலைத் தொடர்பு சேவைகளுக்கான வரிகள் அதிகரிக்கப்படும் என தொலைபேசி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வெட் வரியை 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததன் காரணமாக தொலைத்தொடர்பு சேவைகளுக்கான வரியும் 3 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.
அழைப்புக் கட்டணம், இணையச் சேவைக் கட்டணம், கட்டணத் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் போன்ற அனைத்து சேவைகளுக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்படும் என தொலைபேசி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சில முற்கொடுப்பனவு அட்டைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படாத போதும், அதற்காக வழங்கப்பட்ட டேட்டா கோட்டாவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா கருத்து தெரிவிக்கையில், வெட் வரி காரணமாக தமது வர்த்தகத்தை முன்னெடுத்து செல்வதில் பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதாக குறிப்பிட்டார்.