வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை நகுலேச்சரத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பம்!
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான ஈழமணித் திருநாட்டின் வடபால் அமைந்துள்ள கீரிமலை பதியுறை அருள்மிகு நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவானது இன்று (24) காலை 10.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்தும் 15 நாட்கள் இடம்பெறவுள்ள மகோற்சவத்தில் 07 ம் திகதி பெரிய சப்பறத் திருவிழாவும், மறுநாள் காலைஇரதோற்சவம் இடம்பெறவுள்ளதுடன் இரவு சிவராத்திரி விசேட பூசைகளுடன் ஆன்மீகம் சார் நிகழ்ச்சியும் இடம்பெற்று மறுநாளான 09 ம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.