Jet tamil
இலங்கைமுக்கியச் செய்திகள்

குடும்பசுமை தாங்கமுடியாது வெளிநாடு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

குடும்பசுமை தாங்கமுடியாது வெளிநாடு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

குடும்ப சுமை தாங்க முடியாது பிறந்த குழந்தையையும் விட்ட விட்டு ஆறு மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கு வீட்டு வேலைக்கு சென்ற மாதிரிகிரி திவுலங்கடலைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயார் வேலை செய்து கொண்டிருந்த வீட்டில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் மாதிரிகிரிய திவுலங்கடலைச் சேர்ந்த பி. தில்மி மதுபாஷினி குமாரி என்ற 26 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, குடும்பத்தின் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட, இந்த பெண் வீட்டு வேலை செய்யச் சென்றார்.

சவுதியிலிருந்து தனது உறவினர்களுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து தான் வேலை செய்யும் வீட்டில் உள்ள சாரதி பிரச்னை செய்வதாக கூறியுள்ளார். மேலும், வன்புணர்வு செய்ய முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த பெண் வெளியூர் சென்ற நாளிலிருந்து வாரம் ஒருமுறை அல்லது இருமுறை உறவினர்களுடன் தொலைபேசியில் பேசி வீட்டில் வேலை அதிகம் என்றும் ஒவ்வொரு முறையும் பேசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை என்றும் கணவரிடம் கூறி உள்ளார்.

முதல் மாதத்தில் 78,000 ரூபாய் சம்பளம் கொடுத்ததாகவும், சில மாதங்களுக்குப் பிறகு அது குறைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இரண்டாவது மாதத்தில் 53,000 பின்னர் 20,000 கடந்த மாதம் 10,000 ஆக குறைக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரேயடியாக பணம் தருவதில்லை என்று அந்த பெண்மணி கூறியுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் திகதி தனது கணவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டிருந்த நிலையில், அதன் பின்னர் அவருக்கு அழைப்பு வராததால், கணவர் கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு இது தொடர்பில் அறிவித்துள்ளார்.

அங்கு, ஒரு வாரத்திற்கு முன்பு எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இந்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Related posts

புகையிரத விபத்தில் இருவர் உயிரிழப்பு!

kajee

மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

kajee

யாழில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தின நிகழ்வு…!

Sinthu

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் கெருடபுராணம் எனும் தலைப்பில் ஆண்மீக உரை

Sinthu

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தயார்! சந்திரிக்கா அதிரடி அறிவிப்பு

jettamil

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி

jettamil

Leave a Comment