யாழில் மடு அன்னையின் திருச்சொரூப வீதியுலா…
யாழில் மடு அன்னையின் சொரூப வீதியுலா ட்ரோன் வானூர்தி மூலம் மலர் சொரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மருதமடு அன்னையின் முடிசூட்டு நிகழ்வின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடு மாதாவின் திருச்சொரூபம் கடந்த வாரம் யாழ் மாவட்டத்துக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாண மறை மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களை நோக்கி திருச்சொரூபம் பவனியாக எடுத்துச் செல்லப்பட்டு, திருப்பலிகள், வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அன்னையின் பயணப் பாதையெங்கும் ட்ரோன் மூலம் அன்னைக்கு பூச்சொரிந்து சிறப்பிப்பதற்கு தேவையான அனுமதியை பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் நிகழ்வுகளின் ஏற்பாட்டுக்குழுவினரால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஏற்பாட்டுக்குழுவினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய துரிதமாக செயற்பட்ட அமைச்சர், மடு அன்னையின் சொரூபம் விஜயங்களின்போது பயணப் பாதைகளில் ட்ரோன் வானூர்தி மூலம் அன்னைக்கு பூச்சொரிந்து சிறப்பிப்பதற்கு தேவையான அனுமதியை பெற்றுக் கொடுத்துள்ளார்.
முன்பதாக பாதுகாப்பு காரணமாக தனிப்பட்டவர்களால் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் ட்ரோன் வானூர்தி பாவனை மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ள நிலையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடி குறித்த அனுமதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.