Welcome to Jettamil

புலிகள் காலத்தில் இது நடக்கவில்லை! – ரவிகரன் எம்.பி. தெரிவிப்பு!

Share

புலிகள் காலத்தில் இது நடக்கவில்லை! – ரவிகரன் எம்.பி. தெரிவிப்பு!

வடக்குக் கடற்பரப்பில் அத்துமீறும் இந்திய இழுவைப்படகுகளின் செயற்பாடுகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் நேற்று (டிசம்பர் 12, 2025) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முக்கிய கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகள் இருக்கவில்லை. கடற்புலிகளின் தளபதி வடக்கு, கிழக்குக் கடற்பரப்பை தமது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

தற்போது இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலால் தாயகப் பரப்பிலுள்ள கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தினார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை