Welcome to Jettamil

சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் டிரம்ப்: கடுமையான கண்டனம்

trump

Share

சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் டிரம்ப்: கடுமையான கண்டனம்

சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) நிர்வாகத்திற்கு கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் (Pope Francis) கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மேக்ஸிகோ மற்றும் கனடா போன்ற நாடுகளிலிருந்து பல்வேறு மக்களும் சட்டவிரோதமாக அமெரிக்கா புகுந்து வருகின்றனர். இந்த சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக, டிரம்ப் தலைமையிலான புதிய அமெரிக்க அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களை தங்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்புவதைத் தொடங்கியுள்ளது.

இந்த நடவடிக்கையின் கீழ், இந்தியா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த குடியேறிகளை கண்டறிந்து, அவர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர்.

இந்த நிலையில், சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் டிரம்ப் நிர்வாகத்திற்கு போப் பிரான்சிஸ் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் அமெரிக்க பாதிரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இந்த நடவடிக்கை புலம்பெயர்ந்தோரின் கண்ணியத்தை கெடுக்கின்றது மற்றும் இது மோசமாக முடியும் என போப் தெரிவித்துள்ளார்.

போர், வறுமை மற்றும் காலநிலை மாற்றங்களால் பாதிக்கபட்டவர்களை பிற நாடுகள் பாதுகாக்க வேண்டும் என்று கடந்த காலமாக அவர் கோரிக்கை விடுத்து வந்துள்ளார். இந்த நிலைமையில், அரசாங்கங்கள் தங்கள் திறனின் உச்சபட்சம் வரை இதனை செய்யவேண்டும் என போப் வலியுறுத்தியுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை