வடமராட்சி கிழக்கு, வத்திராயனில் இருந்து நேற்று பிற்பகல் கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் பிற்பகல் கடலுக்குச் சென்ற மீனவர்கள் நேற்றுக்காலை கரை திரும்பிய நிலையில், இரண்டு மீனவர்கள் மட்டும் கரைதிரும்பவில்லை.
இதையடுத்து, மூலம் மீனவர்கள் தேடுதல் நடத்திய போது, குறித்த மீனவர்களின் வலை வெட்டப்பட்டு துண்டங்களாகக் காணப்படுகின்ற போதும், அவர்கள் சென்ற படகு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனப் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்கள் சென்ற படகு, பாரிய படகுகளுடன் மோதி கடலில் மூழ்கடிக்கப்பட்டிருக்கலாமென மீனவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
யோசேப் பிரேம்குமார், அருண்குமார் தணிகைமாறன், ஆகிய இரண்டு மீனவர்களுமே காணாமல் போயுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.