Welcome to Jettamil

திருநெல்வேலியில் நேற்றிரவு கோர விபத்து – இருவர் பலி

Share

யாழ்ப்பாணம்- திருநெல்வேலி கிழக்குப் பகுதியில் நேற்றிரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் மேலும் மூன்று பேர், படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி கிழக்கு இராமலிங்கம் வீதியில், பூங்கனிச்சோலைக்கு அருகில் நேற்றிரவு 10.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஒரு மோட்டார் சைக்கிளில் மூவரும், மற்றுமொரு மோட்டார் சைக்கிள் இரண்டு பேரும் பயணித்த நிலையில், இரண்டு மோட்டார் சைக்கிள்களும் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிர்எதிரே மோதிக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தை அடுத்து, இரண்டு மோட்டார் சைக்கிளும், தீப்பிடித்து எரிந்துள்ளன.

அயலவர்கள் உடனடியாக தீயை அணைத்து , படுகாயமடைந்த நிலையில் இருந்த மூவரை நோயாளர் காவு வண்டி மூலம், வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விபத்து தொடர்பாக, கோப்பாய் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று அவர்கள், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை