Welcome to Jettamil

ஐ.நா செயலாளர் நாயகம் உக்ரைனுக்குப் பயணம்

Share

ஐ.நா செயலாளர் நாயகம் அன்டனியோ குட்டெரெஸ் (Antonio Guterres) உக்ரைனுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர், அங்கு ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியைச் (Volodymyr Zelenskyy) சந்திப்பதற்கு முன்னதாக,  போரோடியங்கா(Borodyanka) நகருக்குப் பயணம் மேற்கொண்டார்.

போரினால்  அந்த நகரில் ஏற்பட்டுள்ள சேதங்களை ஐ.நா செயலாளர் நாயகம் பார்வையிட்டுள்ளார்.

அங்கு நடந்த சம்பவங்களைப் பற்றி ராணுவ அதிகாரிகள் அவருக்கு விளக்கமளித்தனர்.

ரஷ்யப் படையினர் அங்குள்ள வீடுகள் மீது வான்தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

நகரில் 50 வீதமான  கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் பொதுமக்களில் 112 பேர் கொல்லப்பட்டதாகவும் ராணுவ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக மொஸ்கோவுக்குச் சென்றிருந்த ஐ.நா செயலாளர் நாயகம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைச் சந்தித்தார்.

இதன்போது, மரியுபோல் நகரில் உள்ள எஃகு ஆலையிலிருந்து பொதுமக்களை மீட்கும் நடவடிக்கையில் ஐ.நா நிறுவனமும் அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கமும் பங்கேற்பதற்கு இருவரும் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்தனர்.

அந்த ஆலையின் கீழ் உள்ள பதுங்குகுழிகளில் சுமார் இரண்டாயிரம் உக்ரைன் துருப்புக்களும், ஆயிரம் பொதுமக்களும் ஒளிந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை