வல்வெட்டித்துறையின் மாபெரும் வினோத விசித்திர பட்டத்திருவிழா போட்டி
யாழ்ப்பாணம் வல்வை விக்கினேஸ்வரா சன சமூக சேவா நிலையம், வல்வெட்டித்துறை மாவடி உதயசூரியன் கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறையின் மாபெரும் வினோத விசித்திர பட்டத்திருவிழா போட்டி தைத்திருநாளினை முன்னிட்டு எதிர்வரும் 15.01.2024 அன்று வல்வெட்டித்துறை மாவடி உதயசூரியன் கழகத்தில் கடற்கரையில் இடம் பெறவுள்ளது.
இதில் வல்வெட்டித்துறை மாவடி உதயசூரியன் வீதியில் உள்ள கடைத்தொகுதிகளில் பட்டங்கள் கட்டும் செயற்பாட்டினை இளைஞர்களினால் முன்னெடுத்து வருகின்றனர். இதனை வாழ்வாதார தொழிலாக கொண்டு, இளைஞர்கள் இரவு-பகலாக பட்டங்களை கட்டி, நிறமுட்டியும் வருவதுடன் காட்சிப்படுத்தி வருகின்றனர்.
இதில் 250ரூபா முதல், 500, 700, 10,000, 15,000 ரூபா வரையாக பட்டங்கள் விற்பனையாகி வருகின்றது. இதனை கொள்வனவு செய்வதற்கு பலர் தயாராகி வருகின்றனர். 02அடி முதல் 07அடி முதல் வரை பட்டங்கள் காணப்படுகின்றது. மேலும் பட்டங்களை பறக்கவிட்டு ஒத்திகை பார்க்கும் நிகழ்வும் இடம்பெற்றது.













