மீண்டும் களம் இறங்கும் விஜய்! – புதிய படத்தில் நடிக்க முடிவு : மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்
நடிகர் விஜய்யின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை மற்றும் தேர்தல் காரணங்களால் தாமதமாகி வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை திடீரென இணையத்தில் வெளியானது.
முழுப் படமும் கசிந்ததால் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
ரஜினி, கமல், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், படத்தைத் தயாரித்த நிறுவனத்திற்குப் பாரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டது.
இந்த இக்கட்டான சூழலில், தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட நடிகர் விஜய் ஒரு மகத்தான முடிவை எடுத்துள்ளார்.
அதன்படி, அந்த நிறுவனத்திற்காக மீண்டும் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொடுக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசியலில் நுழையும் முடிவில் இருந்த விஜய், தயாரிப்பாளரின் நலன் கருதி மீண்டும் நடிக்க வருவது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.





