கோதுமை மாவை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 35 ரூபாவினால் மீண்டும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இரண்டு நிறுவனங்களினால் மட்டுமே கோதுமை மா இறக்குமதி செய்யப்படுவதாகவும் அதில் ஒரு நிறுவனத்தின் விலை நேற்று அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரியின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார். இதன்படி, 50 கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை தற்போது 12,500 ரூபாவாக உயர்ந்துள்ளதுடன், சில காலங்களுக்கு முன்னர் அது 4,000 ரூபாவிற்கும் கீழ் இருந்தமை குறிப்பிடத்தக்கது.